Mandriva Linux நிறுவுதல் கட்டளைகள் - மான்ட்ரிவ லினக்ஸ் 2007 தேவைப்படும் கணினி அமைப்பு * பெண்டியம் அல்லது நிகரான செயலகம் (processor) * சிடி இயக்கி (drive) * குறைந்தது 32 MB நினைவகம், 64 MB பரிந்துரைக்கப்படுகிறது. மாண்ட்ரேக் லினக்ஸை நிறுவும் முறை மிக எளிமையானது. பெரும்பாலும், லினக்ஸ் சிடியை இயக்கியினுள்(cd drive) பொருத்தி கணினியை மறுதொடக்கம் செய்தால் போதும். தயவுசெய்து விபரம் 1 யை காணவும். குறிப்பு: * உங்களின் 7.x, 8.x அல்லது 8.x லினக்ஸ் பதிப்பை மேம்படுத்த(Upgrade) வேண்டுமெனில், கோப்புகளை காப்பு நகல் (backup copy) எடுக்க மறவாதீர்கள். * உங்களிடம் லினக்ஸ் 7.0 க்கு முந்தைய பதிப்பு இருந்தால், மேம்படுத்த இயலாது. புதிதாக லினக்ைஸ நிறுவுதல் ஒன்றே வழி. ============================================================================ கீழ்க்கண்டவை மான்ட்ரிவ லினக்ஸை நிறுவுவதற்கான பல்வேறு வழிகள்: 1. நேரடியாக சிடியிலிருந்து தொடங்குதல். 2. விண்டோசை பயன்படுத்தி தொடங்கு நெகிழ்வட்டு(boot floppy disk) உருவாக்குதல். 3. பிற வழிகளில் நிறுவுதல். ============================================================================ 1. நேரடியாக சிடியிலிருந்து தொடங்குதல். நிறுவும் சிடியைப் பயன்படுத்தி லினக்ைஸ தொடங்கலாம். லினக்ஸ் சிடியை இயக்கியினுள் பொருத்தி, கணினியை மறுதொடக்கம் செய்யுவும். பிறகு, கணினித் திரையில் தோன்றும் ஆணைகளை பின்பற்றுங்கள். நிறுவுவதற்கு [Enter] விசையையும் உதவி கோப்பிற்கு [F1] விசையையும் அழுத்தவும். குறிப்பு: சில கணினிகளில், சிடியிலிருந்து தொடங்க முடியாமல் போகலாம். இது போன்ற சூழலில் தொடங்கு நெகிழ்வட்டை உருவாக்க வேண்டும். விவரங்களுக்கு விபரம் 2 ஐ படியுங்கள். ============================================================================ 2. விண்டோசை பயன்படுத்தி தொடங்கு நெகிழ்வட்டு(boot floppy disk) உருவாக்குதல். லினக்ஸ் சிடியை பயன்படுத்தி தொடங்க முடியாவிட்டாலோ அல்லது மேற்கூறிய வழிகள் பயனளிக்கவில்லை என்றாலோ, விண்டோசை பயன்படுத்தி தொடங்கு நெகிழ்வட்டை உருவாக்குவது அவசியம். * சிடியை இயக்கியினுள் பொருத்தி, “MyComputer” குறும்படத்தை திறக்கவும். அதனை வலது சொடுக்கி, பட்டியலில், “Open”னை தேர்ந்தெடுங்கள். * ”dosutils” அடைவினுள் நுழைந்து, “rawwritewin” குறும்படத்தை இருமுறை சொடுக்குங்கள். * வெற்று(blank) நெகிழ்வட்டை இயக்கினுள் சொருகுங்கள். * select "D:\images\cdrom.img" in the "Image File" field (உங்களது மென்தட்டு "D:" என வைத்துக்கொள்ளலாம், இல்லாவிடின் "D:" தேவைக்கேற்ப மாற்றவும்) * "நெகிழ்வட்டு " நிலையில் "A:" யை தேர்வு செய்து பின் "எழுது" வை சொடுக்கவும். நிறுவுதலை தொடங்க: * சிடிவட்டையும், தொடங்கு நெகிழ்வட்டையும் இயங்கியினுள் பொருத்தவும். * கணினியை மறுதொடக்கம் செய்யுங்கள். ============================================================================ 3. பிற வழிகளில் நிறுவுதல். மேற்கூறிய வழிமுறைகள் உங்களுக்கு பொருந்தவில்லையெனில் (உதா: கணினி வலையமைப்பில் லினக்ைஸ நிறுவுதல் அல்லது pcmcia சாதனத்தில் நிறுவதல்) தொடங்கு நெகிழ்வட்டை உருவாக்க வேண்டும். * லினிக்ச்ின் (அல்லது யுனிக்ஸ் அமைப்பு) தூண்டிலில் $ dd if=xxxxx.img of=/dev/fd0 * விண்டோசிலிருந்து, மூன்றாவது வழியில் கூறிய ஆணைகளை பின்பற்றுங்கள், ஆனால் cdrom.img பதிலாக xxxxx.img பயன்படுத்தவும் (கீழே கொடுக்கப்பட்டுள்ள பட்டியலைக் காண்க). * DOS சிலிருந்து தட்டச்சுசெய்யவும் (D: உங்கள் சிடி drive யை குறிக்கும் எழுத்து): D:\> dosutils\rawrite.exe -f install\images\xxxxx.img -d A தொடங்கல் பிம்பங்கள் பட்டியல் இங்கே: +-----------------+------------------------------------------------------+ | cdrom.img | சிடிவட்டிலிருந்து நிருவும்போது | +-----------------+------------------------------------------------------+ | hd_grub.img | வன்வட்டிலிருந்து(harddisk) நிறுவும்போது(லினிக்சில் | | | அல்லது விண்டோஸ் அல்லது ReiserFS கோப்பு) | | | உங்களது கணினிக்கு நீங்கள் இங்கே வரையறுக்க: | | | http://qa.mandriva.com/hd_grub.cgi | +-----------------+------------------------------------------------------+ | network.img | ftp/nfs/http யிலிருந்து நிறுவும்போது | | | குறிப்பு: உங்களது நெகிழ்வட்டு இயக்கியில் | | | network_drivers.img ஐ கேட்கும்பொழுது சொருக வேண்டும் | +-----------------+------------------------------------------------------+ | pcmcia.img | pcmcia சாதனங்களிலிருந்து நிறுவ (எச்சரிக்கை, மேலான | | | pcmcia வலை அடாப்டர்கள் இப்பொழுது நேரடியாக | | network.img லிருந்து ஆதரிக்கப்படுகின்றன) | +-----------------+------------------------------------------------------+ நீங்கள் boot.iso மென்தட்டில் எழுதி கூட தொடங்கலை ஆரம்பிக்கலாம். அது அனைத்து நிறுவல் முறைகளையும் ஆதரிக்கிறது, மென்தட்டு, வலையமைப்பு, மற்றும் வன்தட்டு. ============================================================================ கொடாநிலை வரைவியல்வழு நிறிவலை பயன்படுத்துவதில் சிரமமிருந்தால், உரைவழியைப் பயன்படுத்தி நிறுவலாம். மாண்ட்ரேக் லினக்ஸ் வரவேற்பு திரை தோன்றியதும், [F1] விசையை அழுத்தவும். பிறகு “text” என்று உள்ளீடுங்கள். ஏற்கனவே நிறுவப்பட்டிருக்கும் மாண்ட்ரேக் லினிக்ஸை மீட்கவேண்டுமெனில், நிறுவல்சிடியைப் பொருத்துங்கள் (அல்லது சார்ந்த நெகில்வட்டு). மாண்ட்ரேக் லினக்ஸ் வரவேற்பு திரை தோன்றியதும், [F1] விசையை அழுத்தவும். பிறகு “rescue” என்று உள்ளீடுங்கள். மேலும் தொழில்நுட்பம் சார்ந்த தகவல்களுக்கு http://www.mandrivalinux.com/drakx/README கோப்பை படிக்கவும். ============================================================================ நிறுவதலின் முக்கியமான கட்டங்கள்: 1. லினக்ஸ் சிடியை இயக்கியினுள் பொருத்தி (தேவைப்பட்டால் நெகிழ்வட்டை பயன்படுத்தவும்), கணினியை மறுதொடக்கம் செய்யுங்கள். 2. மாண்ட்ரேக் லினக்ஸ் வரவேற்பு திரை தோன்றியதும் [Enter] விசையை அழுத்தவும். பிறகு திரையில் தோண்றும் ஆணைகளைக் கவனமாக பின்பற்றுங்கள். 3. நிறுவுதல் முடிவுற்றபின் சிடியை வெளியே எடுங்கள் (நெகிழ்வட்டையும் வெளியே எடுக்கவும்). உங்கள் கணினி தானாகவே தொடங்கும். இல்லையெனில் நீங்களே தொடங்குங்கள். 4. மாண்ட்ரேக் லினின்ஸ் தொடங்கியவுடன் பயனர்பெயர் (username) அல்லது “root” பயன்படுத்தி நுழையவாம். முக்கிய குறிப்பு: இந்த “"root"” கணக்கைப் பயன்படுத்தி, கட்டுப்பாடற்ற அணுகலை (எந்த கோப்பையும் நீக்கலாம், திருத்தலாம், பெயர்மாற்றம் செய்யலாம்) பெறலாம். மைய அமைப்பை மாற்றவும், லினக்ைஸ நிர்வாகிக்க மட்டுமே இக்கணக்கை பயன்படுத்துங்கள். தினசரி பயன்பாட்டிற்கு ஒரு சாதாரன பயனர் கணக்கை பயன்படுத்துங்கள். பயனரை உருவாக்க, "userdrake" சாதனம் அல்லது "adduser" மற்றும் "passwd" கட்டளைகளைப் பயன்படுத்தலாம். நீங்கள் மாண்ட்ரேக் லினக்ஸ் பயன்படுத்த எங்கள் வாழ்த்துக்கள். ============================================================================ கூடுதல் ஆதரவிற்கு, கீழ்க்கண்டதை காணவும்: * மின்-ஆதரவு http://www.mandrivaexpert.com/ ல் * மான்ட்ரிவ லினக்ஸ் எர்ராட்டா http://www.mandrivalinux.com/en/errata.php3 ல் * மான்ட்ரிவ லினக்ஸ் பாதுகாப்பு அறிவுரைகள் http://www.mandriva.com/security/advisories ல் * வலைமீதான ஆவணங்கள் http://www.mandrivalinux.com/en/fdoc.php3 ல் * http://club.mandriva.com ல் உள்ள மான்ட்ரிவ கிளப் வலையிணைப்பு கருத்து பரிமாற்றக்குழுவை வாசித்து சேர்க. * http://www.mandrivalinux.com/en/flists.php3 ல் உள்ள அஞ்சல் பட்டியலில் சேர்க * எளிதாக தேடக்கூடிய அஞ்சல் பட்டியல் குவியல்களுக்கு http://marc.theaimsgroup.com/ * லினக்ஸுக்காக வலையமைப்பில் கூகிளை பயன்படுத்தி தேடுக http://www.google.com/linux * Usenet குழுக்களை கூகிள் குழுக்களை பயன்படுத்தி http://groups.google.com/groups?group=comp ல் தேடுக ============================================================================